இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரை சந்தித்த ஜனாதிபதி

32

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரும் குருணாகல் ஆயருமான பேரருட்திரு கலாநிதி ஹெரால்ட் அந்தோனி பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (02) பிற்பகல் நடைபெற்றது.

குருணாகல் கத்தோலிக்க ஆயர் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, ஆயரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின்னர், கத்தோலிக்க சமய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட பதில் ஆயர் வண. பிதா பியல் ஜானக பெனாண்டோ மற்றும் குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட பொருளாளர் வண. பிதா சாகர பிரசாந்த ஆகியோருடன் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கலந்துகொண்டார்.

Join Our WhatsApp Group