அரச ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் சம்பளத்தில் பாதியே வழங்கப்படும் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்தில் பாதியே வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.