வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் ப இருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு ( படங்கள்)

0
43

நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளன. புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என சந்தேகிக்கப்படும் நிலையில்,  அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வலப்பனை, குருதுஓயே பகுதியில் உள்ள புதையல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறும் பகுதியென கருதப்படும், குழியொன்றில் இருந்தே  – 61 வயதான அபேசிங்க பண்டா மற்றும் 30 வயதான ருவான் குமார ஆகிய இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருவரும் நேற்று முன்தினம் வீடு திரும்பாத நிலையில், அது தொடர்பில் உறவினர்கள் வலப்பனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் விசாரணையின்போதே, சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழிக்குள் இருந்து தண்ணீர் மோட்டார் இயந்திரமும், குழிக்கு வெளியே இருந்து ஜெனடேட்டர் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்