நுரைச்சோலை அனல்மின் நிலைய பணிகள் வழமைக்கு திரும்பின

13

*செயலிழந்த மூன்றாவது மின்பிறப்பாக்கி
சீர் செய்யப்பட்டது.

மூன்றாவது மின்பிறப்பாக்கி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சீர் செய்யப்பட்டு மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.

அமைச்சர் ட்விட்டர் பதிவொன்றை விடுத்து இதனை குறிப்பிட்டுள்ளார். முதலாவது மற்றும் மூன்றாவது மின்பிறப்பாக்கி இயந்திரங்களும் முழு திறனில் இயங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் மின்பிறப்பாக்கி இயந்திரத்தில் நடந்து வரும் 3 மாத வழக்கமான சீரமைப்பு பராமரிப்பு பணிகள் ஒக்டோபர் நடுப்பகுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

Join Our WhatsApp Group