ஈரானில் ஹிஜாப் அணியாமல் உணவகத்தில் சாப்பிட்ட இரு பெண்கள் கைது

43

தெஹ்ரான்: ஈரானில் உள்ள ஓர் உணவகத்தில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட இரு இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டோன்யாவும் அவரது நண்பரும் ஹிஜாப் அணியாமல் உணவகத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது செயலுக்கு விளக்கத்தையும் பாதுகாப்புப் படையினர் கேட்டுள்ளனர். இரு பெண்களும் எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் எவின் சிறைச்சாலை என்பது ஒரு மோசமான சிறையாக கருதப்படுகிறது. ஈரான் அரசை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் பொதுவாக இந்த சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள். இந்த சிறைச்சாலை உளவுத் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. ஈரானில் ஹிஜாப்க்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், இந்த இளம்பெண்களின் கைது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Join Our WhatsApp Group