உக்ரைனில் கைப்பற்றிய நான்கு பிரதேசங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.இதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் ஜனாதிபதி புட்டின் வெள்ளிக்கிழமை (30) கைச்சாத்திட்டார்.இப்பிரதேச மக்களின் இதுகுறித்த விருப்புக்களை அறிவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படும் என்றும் புட்டின் தெரிவித்தார்.
கெரஸோன்,லுஹான்ஸ்க்,டூனெஸ்ட் மற்றும் ஷபோரென்ஷியா ஆகிய பிரதேசங்களையே,ரஷ்யா தனது ஆளுகைப் பகுதியாக அறிவித்துள்ள து.இதையடுத்து,ரஷ்யாவின் புதிய வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. ரஷ்ய இராணுவத் தலைமையகமான கிரெம்ளினில் இப்படம் வரையப்பட்டு ள்ளது.மேலும்,உள்விவகாரங்களில் தலையிடுவது அணுவாயுத யுத்தத் தை தோற்றுவிக்கும் எனவும் கிரெம் ளின் எச்சரித்துள்ளது.
ரஷ்யாவின் இந்தச்செயற்பாடுகளை கடுமையாகக் கண்டித்துள்ள ஐரோப் பா உள்ளிட்ட அமெரிக்க நாடுகள், ஜனநாயகத்தை ரஷ்யா காலால் மிதித்து கேலி செய்துள்ளதாகக் கூறியுள்ளன.ஆக்கிரமித்தல்,வரைபடம் வெளியிடல்,அச்சுறுத்தல் இன்னும் பழிவாங்கல்களால்களால் உக்ரை னை பணியவைக்க இயலாதென வொலொடிமிர் ஷெலன்ஸ்கி தெரிவி த்துள்ளார்.இனியாவது நேட்டோவில் எங்களை இணைக்க வேண்டும் என் றும் ஜனாதிபதி ஷெலன்ஸ்கி கூறினார்.