Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுதந்தையை வெட்டி கொலை செய்த மகனை கைது செய்த போலீசார் போதைப் பொருளுக்கு அடிமையானவராம்….

தந்தையை வெட்டி கொலை செய்த மகனை கைது செய்த போலீசார் போதைப் பொருளுக்கு அடிமையானவராம்….

ஹோகந்தர-வித்யாராஜ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கி, தந்தையின் உடலை தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோகந்தர-சிங்கபுர பகுதியில் வைத்து இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கபுர பிரதேசத்தில் உள்ள புத்தர் கோவிலுக்கு அருகில் சந்தேகநபர் தங்கியிருப்பதாக மேல்மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, மாலபே பொலிஸ் குழுவினர் நேற்று இரவு 8.00 மணியளவில் சந்தேக நபரை கைது செய்தனர்.

சம்பவத்தில் ரஞ்சித் சேனாரத்ன என்ற 57 வயதான முச்சக்கரவண்டி சாரதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்த மகனை தாய் அண்மையில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும், தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments