Saturday, 3 December, 2022
yaraglobal
Homeவிளையாட்டுகொரியா ஓபன் டென்னிஸ்: ராடு ஆல்பட், டெனிஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்..!

கொரியா ஓபன் டென்னிஸ்: ராடு ஆல்பட், டெனிஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்..!

சியோல்: கொரியா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மால்டோவா வீரர் ராடு ஆல்பட், அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனுடன் மோதினார்.

இந்த போட்டியில் ராடு ஆல்பட் 7-6 (7-3), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஜான்சனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின் வீரர் ஜவுமி மூனார், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் ஷபோவலோவ் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் மூனாரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். நாளை மறுநாள் நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தில் ராடு ஆல்பட், டெனிஸ் ஷபோவலோவ் மோதுகின்றனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments