Saturday, 3 December, 2022
yaraglobal
Homeதொழில்நுட்பம்கண்டுபிடிப்புகளை அதிகம் நிகழ்த்தும் நாடுகள் - ஐ.நா தரவரிசைப் பட்டியல்.

கண்டுபிடிப்புகளை அதிகம் நிகழ்த்தும் நாடுகள் – ஐ.நா தரவரிசைப் பட்டியல்.

ஜெனீவா: உலகில் கண்டுபிடிப்புகளை அதிகம் நிகழ்த்தும் நாடுகளின் பட்டியலில் ஸ்விட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.
புதிய புதிய கண்டுபிடிப்புகள்தான் உலகை நவீனத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. அந்த வகையில், உலகில் நிகழும் கண்டுபிடிப்புகளின் பின்னணியில் இருக்கும் சமூக, பொருளாதார காரணிகள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கிறது ஐ.நா பொருளாதார சமூக கவுன்சிலின் துணை அமைப்பான உலக அறிவுசார் சொத்து அமைப்பு.

அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள உலக அறிவுசார் சொத்து அமைப்பு, அதில், கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் ஒவ்வொரு நாடும் எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் உயர் வருவாய் கொண்ட நாடுகள், மேல் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள், கீழ் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள், குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் என பொருளாதார ரீதியாக 4 வகையாகவும், பிராந்திய ரீதியாக 7 வகையாகவும் உலகை பிரித்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிப்புகளுக்கான உலக தரவரிசைப் பட்டியல்:

  1. ஸ்விட்சர்லாந்து
  2. ஸ்வீடன்
  3. அமெரிக்கா
  4. பிரிட்டன்
  5. தென் கொரியா
  6. நெதர்லாந்து
  7. ஃபின்லாந்து
  8. சிங்கப்பூர்
  9. டென்மார்க்
  10. ஜெர்மனி
  11. பிரான்ஸ்
  12. சீனா
  13. ஜப்பான்
  14. ஹாங் காங், சீனா
  15. இஸ்ரேல்

இந்தியா மற்றும் அண்டை நாடுகளின் தரவரிசை:

இந்தியா – 46

இலங்கை – 95

பாகிஸ்தான் – 99

நேபாள் – 111

பங்களாதேஷ் – 116

மியான்மர் – 127

உலக நிலப்பரப்பை 7 பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களில் உள்ள நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments