Saturday, 3 December, 2022
yaraglobal
Homeகட்டுரைபெண்கள் உரிமைக்காக சவுதி மன்னரை இடித்துரைத்த ராணி.

பெண்கள் உரிமைக்காக சவுதி மன்னரை இடித்துரைத்த ராணி.

**ராணி எலிசபெத் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் கார் ஓட்டலாம்.

**சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கவில்லை.

ராணி எலிசபெத் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் கார் ஓட்டலாம். லைசென்சு தேவையில்லை. பாஸ்போர்ட்டும் தேவையில்லை. ஒரு முறை சவுதி மன்னரை விருந்துக்காக ராணி அழைத்து இருக்கிறார்.

அப்போது மன்னரை ஏற்றிக்கொண்டு ராணியே கார் ஓட்டி சென்றிருக்கிறார். அவரது எளிமையை பார்த்து சவுதி மன்னரும் வியந்து இருக்கிறார். ஆனால் அவர் கார் ஓட்டி சென்றது வேறு காரணத்துக்காக, அப்போது சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கவில்லை. அதை இடித்துரைப்பதற்காக ராணி கார் டிரைவராக செயல்பட்டு இடித்துரைக்கத்தான்.

ராணி கையெழுத்து போட்டால்தான் இங்கிலாந்து சட்டங்கள் செல்லும்

**இங்கிலாந்து ராணிக்கு ஆண்டுதோறும் இரண்டு பிறந்த நாட்கள் கொண்டாடுவது வழக்கம்.

**இங்கிலாந்து பாராளுமன்றம் அறிமுகப்படுத்தும் புதிய சட்டங்களில், ராணி தான் கையெழுத்திட வேண்டும்.

* இங்கிலாந்து ராணிக்கு ஆண்டுதோறும் இரண்டு பிறந்த நாட்கள் கொண்டாடுவது வழக்கம். ஒன்று அவருடைய உண்மையான பிறந்தநாள். மற்றொன்று அரசு எடுக்கும் விழா. இது ஜூன் மாதம் ஏதாவது ஒரு சனிக்கிழமை கொண்டாடப்படும். அதன்படி, ஜூன் 5, 2021-ல் எளிமையாக கொண்டாடப்பட்டது.

* உண்மையான பிறந்தநாள் அன்று மூன்று இடங்களில் 41, 21, 62 என துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதை உண்டு.

* ராணியாக பதவி ஏற்று 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 70 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதை நான்கு நாள் விழாவாக, பக்கிங்ஹாம் அரண்மனை கொண்டாடியது.

* ராணி எலிசபெத்தால் முன் போல், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள இயலவில்லை என்பதால் கடந்த சில ஆண்டுகளாக நேரடி பங்கேற்பை குறைத்துக்கொண்டே வந்தார்.

* அவருடைய மகன் சார்லஸ், ராணியின் பணிகளில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்.

* ராணி ஆண்டுக்கு 2,000-த்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். உடல்நலம் குறைந்ததால் திருமண வரவேற்பு, அரச குடும்பத்து நிகழ்வுகள், தோட்ட பார்டிகள் நடக்கும்போது இவற்றில் ராணி சார்பாக அவரது குடும்பத்தினர் பங்கெடுத்துக் கொள்வார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

* காமன்வெல்த் மற்றும் பல நாடுகளில் நடக்கும் தேசிய நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்கள், ராணி சார்பாக குடும்பத்தினர் பங்கேற்பர். குறைந்தது 3,000 பொது நிகழ்ச்சி இயக்கங்களுக்கு தலைவராகவோ அல்லது போஷகராகவோ இருந்தார் ராணி.

* அரண்மனைக்கு ஒரு நாளைக்கு பல ஆயிரம் கடிதங்கள் வரும். அவை அனைத்துக்கும் ராணி சார்பில் பதில் எழுதி அனுப்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் சாதனை புரிந்த வீரர், வீராங்கனைகளை அழைத்து, ராணிதான் பரிசு வழங்குவார்.

* ராணியின் அரண்மனையில் அவர் புழக்கத்துக்கென்று, தனி ஏ.டி.எம். உண்டு.

* ராணிக்கென தனியாக கவிஞரை நியமித்துக் கொள்ளலாம்.

* இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தும் புதிய சட்டங்களில், ராணி தான் கையெழுத்திட வேண்டும்.

* மேல் சபையின், லார்ட்ஸ் என்ற கவுரவம் மிக்க பதவிக்கு, வியாபாரம், கலை மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் சாதித்தவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பர். அதற்கு ராணியின் ஒப்புதல் பெற வேண்டும்.

* அரசு அமைக்க, உத்தரவிட ராணிக்கு முழு அதிகாரம் உள்ளது. அதேபோல் கலைக்கவும் முழு அதிகாரம் உண்டு.

* மதத்தின் தலைவி. சர்ச் ஆப் இங்கிலாந்தின் தலைவியான ராணிதான் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டரின்போது தன் வயதுக்கு ஏற்ப சீனியர் சிட்டிசன்களுக்கு சிறப்பு வெள்ளி காசுகளை வழங்கி கவுரவிப்பார்.

* ராணியை கைது செய்ய முடியாது. வழக்கு போட முடியாது. அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்.

* ராணிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. எந்த நாட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் போகலாம். ஆனால், ராணியின் குடும்பத்தினருக்கு பாஸ்போர்ட் தேவை.

* எதற்கும் வரி கட்ட வேண்டாம். ஆனால் 1992-ம் ஆண்டு முதல் ராணி சொந்த விருப்பத்தின்படி வரி கட்டி வந்தார்.

* தேம்ஸ் நதியில் குறிப்பிட்ட தூரத்திற்குள் நீந்தும் வாத்துகள் அனைத்தும் ராணிக்கு சொந்தம்.

* கடலின் கரையை ஒட்டிய 5 கி.மீ. தூரத்தில் பிடிபடும் கடற்பன்றிகள், உணவுக்கு பயன்படும் பெரிய மீன் வகைகள் மற்றும் சுறாக்கள் ராணிக்கு சொந்தமாகும்.

* ஆண்டிகுவா, படுவா, திபகாமாஸ், பார்புடா, பெலிஸ், கனடா, க்ரேனடா, ஜமைக்கா, நியூசிலாந்து, பப்பா நியூகயானா, செயின்ட் கீட்ஸ், நெவிஸ், க்ரேனாடைன்ஸ், காலமன் தீவுகள் மற்றும் துவலு நாடுகளுக்கும், எலிசபெத் தான் ராணியாக இருந்தார். இனி அவரது மகன் சார்லஸ் ராஜாவாக இருப்பார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments