இலங்கையின் பிரபல சிங்கள நடிகை தமித்தா அபேயரத்ன இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் இவரை கைது செய்துள்ளனர். பத்திர முல்லையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
ஜனாதிபதி செயலகத்தினுள் அத்துமீறி நுழைந்தமை, போலீசாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் பெயரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடக பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்தது.