Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுவானம் வெளிக்கிறது : வளிமண்டல தளம்பல் படிப்படியாக நகர்வு

வானம் வெளிக்கிறது : வளிமண்டல தளம்பல் படிப்படியாக நகர்வு

– நாட்டின் சில பகுதிகளில் மழை

– ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை

நாட்டைச் சூழ காணப்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை படிப்படியாக நாட்டை விட்டு நகர்வதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றையதினம் (02) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பாரக்கப்படுகின்றது.

ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்  வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தென்திசை நோக்கிய தோற்ற இயக்கம் காரணமாக ஓகஸ்ட் 28ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 07 வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்றையதினம் (02) நண்பகல் 12:10 மணியளவில் முதுகாடு (புத்தளம் மாவட்டம்), தங்கஸ்வெவ (குருணாகல் மாவட்டம்), துத்திரிப்பிட்டி (அநுராதபுரம் மாவட்டம்), ஹம்மில்லேவ (பொலன்னறுவை மாவட்டம்), கும்புணுமூலை (மட்டக்களப்பு மாவட்டம்) ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular