Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டு134 எம்.பிக்களின் உதவியுடன் உறுதியான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் - நாமல் (வலையொளி இணைப்பு)

134 எம்.பிக்களின் உதவியுடன் உறுதியான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் – நாமல் (வலையொளி இணைப்பு)

134 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

134 பாராளுமன்ற உறுப்பினர்களின் உண்மையான ஆதரவுடனேயே ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில், தனக்கு வாக்களித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் உறுதியான அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular