Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

– சில இடங்களில் 100 மி.மீ. வரை பலத்த மழை

– இன்று கற்பிட்டி, துனுபொடகம, உத்திமடுவ, நிகவெவ, வெல்லாய், வெருகல் பகுதிகளில் சூரியன் உச்சம்

இன்றையதினம் (01) நாட்டின் தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை உருவாகக் கூடியசாத்தியம் காணப்படுவதால், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்  வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தென்திசை நோக்கிய தோற்ற இயக்கம் காரணமாக ஓகஸ்ட் 28ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 07 வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (01) நண்பகல் 12.10 மணியளவில் கற்பிட்டி, துனுபொடகம (அநுராதபுரம் மாவட்டம்), உத்திமடுவ, நிகவெவ (பொலன்னறுவை மாவட்டம்), வெல்லாய் (திருகோணமலை மாவட்டம்), வெருகல் (திருகோணமலை மாவட்டம்) ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular