ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தினுள் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் பெண்ணின் சடலம்

163

கேகாலை, கலுகல்ல மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த அலுவலகத்தின் பின்னாலுள்ள அறையொன்றில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக, 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சகுந்தலா வீரசிங்க எனும் 36 வயதான உயிரிழந்த பெண் அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் எனவும், அவர் இன்று (01) காலை குறித்த அலுவலகத்திற்கு வந்திருந்தாகவும் அதன் பின்னரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைணகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த பெண் கட்டில் ஒன்றில் வீழ்ந்து கிடந்துள்ளதோடு, அவருக்கு முன்னால் அலுவலக மேசையொன்றும் உள்ளது. அத்துடன் பெண்ணின் வலது கைக்கு கீழே கைத்துப்பாக்கி ஒன்றும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது, கொலையா? அல்லது தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் விடயத்துடன் தொடர்புபட்டதா? என்பது தொடர்பில் கேகாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Join Our WhatsApp Group