Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeவெளிநாட்டுஉய்குர் முஸ்லிம்களை முடக்கும் சீனா மீது, படுகொலை குற்றச்சாட்டு : ஐ.நா அறிக்கை

உய்குர் முஸ்லிம்களை முடக்கும் சீனா மீது, படுகொலை குற்றச்சாட்டு : ஐ.நா அறிக்கை

உய்குர் முஸ்லிம்கள் விடயத்தில், மனித உரிமையை சீனா மிக மோசமாக மீறியுள்ளதாக ஐ,நா மனித உரிமைகள் ஆணையக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ,நா, மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் மிச்சல்பச்லட் தனது நான்காண்டு பதவிக்காலத்தை பூர்த்தி செய்வதற்கு பத்துமிடங்களுக்கு முன்னர், இந்த அறிக்கை கடந்த புதன்கிழமை (30) வௌியானது.

சுமார் ஒருமில்லியன் உய்குர் முஸ்லிம்களை இணையக் கண்காணிப்புக்குள் முடக்கி, அம்மக்களின் நாளாந்த செயற்பாடுகளை சீனா கண்காணித்து வருவதாகவும், இதில் பலரை கொலை செய்துள்ளதாகவும் ஐ.நாவின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனங்கள் மீதான பாரபட்சத்தை இல்லாதொ ழித்தல் என்ற தலைப்பில் வௌியான இந்த அறிக்கையில், சீனாவின் நடத்தைகள் “படுகொலைகள்” என வர்ணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் 48 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை ஏற்றுள்ளன.

சர்வதேசக்குற்றம் இதுவெனக் கூறியுள்ள இந்நாடுகள், சீனாவின் இச்செயற்பாடுகள் மனிதாபிமானத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளன. எனினும், ஐ,நாவின் இந்த அறிக்கை ஆதாரமற்றதென சீனா தெரிவித்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular