Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமட்டு. நகரில் உணவகங்கள் முற்றுகை : பாவனைக்கு உதவாத 25 மூடை அரிசி மீட்பு

மட்டு. நகரில் உணவகங்கள் முற்றுகை : பாவனைக்கு உதவாத 25 மூடை அரிசி மீட்பு

மட்டக்களப்பு நகரிலுள்ள உணவகங்களை பொது சுகாதார அதிகாரிகள் நேற்று திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.இதன் போது  பாவனைக்கு உதவாத அரசி மூடைகளை கைப்பற்றியுள்ளதுடன் சுகாதாரமற்ற முறையில் செயற்பட்டுவந்த பல கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்தார். 

குறித்த சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள உணவகங்களை திடீர் முற்றுகையிட்டு சோதனையிடும் விசேட நடவடிக்கை ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை காலை முன்னெடுத்தனர் இதன் போது இரண்டு பிரிவுகளாக பொது சுகாதார அதிகாரிகள் உணவங்களை முற்றுகையிட்டனர்.

இதன் போது ஒரு உணவகங்களை சோதனையிட்டு அங்கு பணியாற்றுபவர்கள் சுகாதார பரிசோதனை மேற்கொண்டுள்ளனரா  மற்றும் உணவகங்கள் சிற்றுண்டிகள் உட்பட அனைத்தும் சோதனையிட்டபோது அங்கு ஒரு உணவகத்தில் பாவனைக்கு உதவாத 25 மூடை அரிசி கைப்பற்றியதுடன் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை ஏனைய உணவகங்களை முற்றுகையிட்டபோது, அங்கு சுகாதாரமற்ற முறையில் பல உணவகங்கள் செயற்பட்டுவந்ததை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை தொடர்ந்து இடம்பெறும். அதேவேளை, சுகாதாரம் பேணப்படாது மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த உணவகங்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular