Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

- இன்று கப்பச்சி, தம்மன்னேகுளம, உப்புவெளி பிரதேசங்களுக்கு நேராக சூரியன் உச்சம்

இன்றையதினம் (31) நாட்டின் மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் சில இடங்களில்150 மி.மீ. இற்கும் அதிகமான மிகப் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை உருவாகக்கூடிய கூடிய சாத்தியம் காணப்படுவதால், நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியன் தென்திசை நோக்கிய தோற்ற இயக்கம் காரணமாக ஓகஸ்ட் 28ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 07 வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (31) கப்பச்சி (வவுனியா மாவட்டம்), தம்மன்னேகுளம (அனுராதபுரம் மாவட்டம்) மற்றும் உப்புவெளி (திருகோணமலை மாவட்டம்) ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular