Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநாட்டின் சில பிரதேசங்களில்வெள்ள அபாய எச்சரிச்கை

நாட்டின் சில பிரதேசங்களில்
வெள்ள அபாய எச்சரிச்கை

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை 

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் பெய்து வரும் தொடர்ச்சியான மழையை அடுத்து, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிச்கை
இன்று பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி களுகங்கை ஆற்றுப்படுக்கையின் நீரேந்து பகுதிகளில் கணிசமான மழை பெய்துள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பீ.சீ. சுகீஸ்வர விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அதில் மேலும் தெரிவிக்கையில், அங்குள்ள நீரியல் நிலையங்களின் தற்போதைய மழை நிலைமை மற்றும் ஆற்று நீர் மட்டங்களை பகுப்பாய்வு செய்ததன் மூலம் பெல்மதுளை, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத பிரதேச செயலாளர் பிரிவுகளில் கணிசமான வெள்ள நிலைமை ஏற்பட வாய்ப்பு உள்ளது என அறியத்தருகிறேன்.

இது தொடர்பில் அந்தப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் அதிக கவனம் செலுத்துமாறும், அப்பகுதிகளின் ஊடாகச் செல்லும் வாகன சாரதிகள் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இது தொடர்பாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular