Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகைதான பல்கலைக்கழக மாணவர்கள் 28 பேருக்கும் பிணை

கைதான பல்கலைக்கழக மாணவர்கள் 28 பேருக்கும் பிணை

கொழும்பில் நேற்றையதினம் (30) இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின்போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய (IUSF) உறுப்பினர்கள் 28 பேரையும் பிணையில் விடுவிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ், போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நேற்றையதினம் (30) மருதானை டீன்ஸ் வீதியில், சுகாதார அமைச்சுக்கு அருகில் வைத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் 28 பேர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்றையதினம் (31) மருதானை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சாலிய பீரிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் முன்வைத்த பிணை கோரிக்கையை பரிசீலித்த மாளிகாகந்த நீதவான் திருமதி தனுஜா ஜயதுங்க, சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular