Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகாரணமின்றி கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுங்கள் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் (வலையொளி இணைப்பு)

காரணமின்றி கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுங்கள் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் (வலையொளி இணைப்பு)

தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள் பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த எதேச்சதிகார செயற்பாடு எதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அரசாங்கம், அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி மக்களை எதேச்சதிகாரரீதியாக கைது செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வகட்சி வேலைத்திட்டத்திற்கு ஆதரவை கோரும் அதேவேளை, எதிர்க்கட்சி அதற்கு தயாராக இருக்கும் நிலையில், அரசாங்கம் இத்தகைய போக்கில் ஜனநாயகமற்ற மற்றும் எதேச்சதிகார செயற்பாடுகளில் ஈடுபடும் பட்சத்தில் தாம் எவ்வாறு இதற்கு ஆதரவளிப்பது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular