Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுUPDATE : கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இளைஞன் பலி

UPDATE : கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இளைஞன் பலி

– பாதாள குழு மோதலென பொலிஸ் தகவல்

– அலிவத்த ஹசீத’ என்பவரே உயிரிழந்தவர்

மட்டக்குளி அலிவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

26 வயதான ரணவக்க ஆராச்சிலாகே ஹசித சதுரங்க என அழைக்கப்படும் “அலிவத்தே ஹசித” என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் தொடர்பில் திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular