Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபௌதிக விஞ்ஞானம் உயிரியல் தொழில்நுட்பம் : யாழ். மாவட்டத்தில் இரு மாணவர்கள் முதலிடம்

பௌதிக விஞ்ஞானம் உயிரியல் தொழில்நுட்பம் : யாழ். மாவட்டத்தில் இரு மாணவர்கள் முதலிடம்

2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (28) வெளியான நிலையில், பௌதீக விஞ்ஞானப் பிரிவிலும் உயிர்முறை தொழில்நுட்ப பிரிவிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

பௌதீக விஞ்ஞானப்பிரிவில் ஞானமூர்த்தி சூர்யா என்ற மாணவனும் உயிர்முறை தொழில்நுட்ப பிரிவில் கிருபாகரன் ஹரிகரன் என்ற மாணவனும் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் எட்டு மாணவர்கள் 3A சித்திகளை பெற்றுள்ளதுடன் மேலும் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர் என்றும் நீண்ட காலத்துக்கு பின்னர் மாவட்ட மட்டத்தில் முதல்நிலை இடங்களை பெற்றுள்ளமை பாடசாலைக்கு பிரகாசமான காலம் என பாடசாலை அதிபர் எழில்வேந்தன் தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular