Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபேராதனைப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா இன்று

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா இன்று

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா இன்று (30) பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் பீடாதிபதி பேராசிரியர் ஜெரால்ட் பீரிஸ் தலைமையில் ஆரம்பமானது.

அதற்கமைய இன்றும் நாளையும் மூன்று அமர்வுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறுகின்றது.

தமது படப்ப்படிப்பினையை பூர்த்திசெய்துள்ள சுமார் 3,000 பட்டதாரிகள் இம்முறை தமது துறைசார்ந்த பட்டங்ளை பெற்றுக்கொள்கின்றனர். இதில் 343 முதுகலை பட்டங்களும் 16 கலாநிதி படங்களும் வழங்கப்படுகின்றன.

2020ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா உத்தியோகபூர்வ அறிவிப்பை பீடாதிபதி அறிவித்துள்ளதைத்தொடர்ந்து துணைவேந்தர் பேராசிரியர் எம். டி. லமாவன்ச தலைமையில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

மேலும் பல் மருத்துவ பீடத்தின் பட்டப்படிப்பு மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டதால், இந்த ஆண்டுக்கான பல் மருத்துவ பீடத்தின் வழக்கமான பட்டப்பளிப்பு நிகழ்வு இம்முறை நடைபெறவில்லை என அறியவருகிறது.

பல்கலைக்கழக பீடாதிபதி பேராசிரியர் ஜெரால்ட் பீரிஸ், துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவங்ச , பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித், நூலகர் ஆர். மகேஸ்வரன் மற்றும் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் , பீடாதிபதிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஏனைய பணிக்குழுக்களின் பங்குபற்றலுடன் இந்த பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular