Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுதிருக்கோவிலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி தீச்சட்டி ஏந்தி போராட்டம்

திருக்கோவிலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி தீச்சட்டி ஏந்தி போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினையிட்டு திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்னாள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச மே நீதியை பெற்று தரும்படி கோரி இன்று செவ்வாய்க்கிழமை (30) தீச்சட்டி ஏந்தி சத்தியப் பிரமாணம் செய்து கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பாறை மாவட்டவலிந்து காணாமல் அக்கப்பட்ட சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து தம்பிலுவில் பொதுச் சந்தைக்கு முன்னால் காலை 10 மணிக்கு காணாமல் நூற்றுக்கு மேற்பட்ட போன உறவுகள் ஒன்று திரண்டு சர்வதேச மே எமது நீதியை பெற்று தரவும். எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே? . இராணுவமே தமிழர் நிலங்களை விட்டு வெளியேறு,  போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக திருக்கோவில் மணிக் கூட்டு கோபுரத்தை சென்றடைந்தனர் 

இதனை தொடர்ந்து அங்கு கவனயீர்பு ஆர்ப்பாட்ட்தில் ஈடுபட்டதுடன் தீச்சட்டி  ஏந்தி சத்தியபிரமாண செய்து கொண்ட பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றனா.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular