Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஎதிர்வரும் நாட்களில் மாலையில் இடியுடன் மழை

எதிர்வரும் நாட்களில் மாலையில் இடியுடன் மழை

- இன்று மன்னார், பெரியமடு, மருதோடை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நேராக சூரியன் உச்சம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் எதிர்வரும் சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றையதினம் (30) ஊவா, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில்100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

மேல், தென் மாகாணங்களில் முற்பகல் வேளையிலும் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்  வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியன் தென்திசை நோக்கிய தோற்ற இயக்கம் காரணமாக ஓகஸ்ட் 28ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 07 வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (30) மன்னார், பெரியமடு, வள்ளிவப்பளை (முல்லைத்தீவு மாவட்டம்) மற்றும் மருதோடை (வவுனியா மாவட்டம்) ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular