Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇடது காலால் எழுதி 3A சித்திபெற்று உலகை வியக்க வைத்த மாணவி

இடது காலால் எழுதி 3A சித்திபெற்று உலகை வியக்க வைத்த மாணவி

எஹலியகொட பிரதேசத்தில் கைகள் மற்றும் ஒரு காலின்றி பிறந்து தன் இடது காலை மட்டும் எழுதுவதற்காக பயன்படுத்திய மாணவி ஒருவர் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.

எஹலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்ற ரஷ்மி நிமேஷா குணவர்தன எனும் குறித்த மாணவி உயர்தர வர்த்தக பிரிவில் 3 A சித்திகளை பெற்றுள்ளார்.

2002 டிசம்பர் 23ஆம் திகதி பிறந்த ரஷ்மி, தெல்ஒலுவ பாடசாலையில் ஆரம்ப கல்வியை பெற்றார்.

2012ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் எஹலியகொட தேசிய பாடசாலையில் மேலதிக கற்றல் நடவடிக்கைகளை தொடர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தர பரீட்சையில் 8 A சித்திகளையும் ஒரு B சித்தியும் பெற்றுள்ளார்.

தற்போது உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3 A சித்திகளை பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்ற அவர், 2017ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற Global IT challenge 2017 Super challenger சர்வதேச போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளார்.

வாழ்க்கையில் வெற்றி பெற குறைகள் தடையில்லை என ரஷ்மி நிரூபித்து காட்டியுள்ளார் என பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular