Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகோட்டாவின் மிரிஹான வீட்டு பிரதேசத்துக்கு பலத்த பாதுகாப்பு : பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல்

கோட்டாவின் மிரிஹான வீட்டு பிரதேசத்துக்கு பலத்த பாதுகாப்பு : பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான பகிரிவத்தை பிரதேசத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு பொலிஸ்மா அதிபர் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் வீட்டைச் சூழவுள்ள பகுதிகள் விசேட கண்காணிப்பில் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விஜயம் தொடர்பில் அவரது செயலாளரிடம் கேட்டபோது, ​​இன்னும் சில தினங்களில் அவர் இலங்கை வரவுள்ளதாக கூறினார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

தாய்லாந்து அரசாங்கத்தின் அனுசரணையில் தற்போது கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவியும் விசேட பாதுகாப்பு இடத்தில் தங்கியுள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular