Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeவெளிநாட்டுசமூகவலைத்தளச் செயற்பாட்டாளர் ஷல்மாவுக்கு 34 வருட சிறைவாசம்

சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர் ஷல்மாவுக்கு 34 வருட சிறைவாசம்

சவூதிஅரேபியாவின் முன்னணி சமூக செயற்பாட்டாளர் ஷல்மாஅல்ஷெபாப் 34 வருடங்களுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்கவுள்ளார்.சமூகவலைத் தளங்களூடாக சவூதிஅரசாங்கத்தை யும் இளவரசர் சல்மானையும் விமர்சி த்ததற்காகவே இத்தீர்ப்பு விதிக்கப்பட் டது.பயங்கரவாதச் செயற்பாடுகளை விசாரணை செய்யும் நீதிமன்றம் இவருக்கு மூன்றாண்டுகள் சிறை விதித்தது.

இதை,எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்டு தொடரப்பட்ட வழக் கிலேயே, 34 ஆண்டுகள் சிறையும் 34 வருட பயணத்தடையும் விதிக்கப்பட் டது.இரண்டு பிள்ளைகளின் தாயான 34 வயதுடைய ஷல்மா,லண்டன் பல்க லைக்கழக பட்டாதாரியாவார்.சவூதியி ன் வரலாற்றில் இந்தளவு கூடியகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணும் இவரேயாவார்.

எனினும்,இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவும் சவூதி சட்டத்தில் இடமுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி சவூதிக்கு வந்துசென்ற ஒரு வாரத்தின் பின்னரே, இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.பெண் உரிமைக்காக பேசுவோர் இத்தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.”நாமெல்லோரும் பாதுகாப்பிலுள்ளோமா” என்று பெண்களை விழிப்பூட்டும் பதிவுக ளை சமூக வலைத்தளத்தில்,இவர் வைரலாக்கி வந்தவராவார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular