Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க கிரீன் காட்டுக்கு விண்ணப்பம்

கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க கிரீன் காட்டுக்கு விண்ணப்பம்

- மீண்டும் அமெரிக்காவில் குடியேற திட்டம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா செல்வதற்கு ஏதுவாக கிரீன் கார்ட் விசாவுக்கு விண்ணப்பித்திருக்கின்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தாய்லாந்தில் தங்கி இருக்கின்ற கோட்டாப்பய ராஜபக்ஷ, அங்கிருந்தவாறு கிரீன் காட்டுக்கு விண்ணப்பித்திருக்கின்றார் என்று தெரியவருகின்றது.

எதிர்வரும் 24ஆம் தேதி இலங்கை வர இருக்கின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையிலிருந்து அமெரிக்கா செல்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக இலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு இருக்கின்ற சிறப்பு உரிமைகளின் அடிப்படையில் சகல வசதி வாய்ப்புகளும் செய்து கொடுக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தார். ஆனாலும், நெருக்கடி நிலையில் நாட்டை விட்டு தப்பிச்சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

என்றாலும், அமெரிக்காவுக்கு செல்வதற்கு அவருக்கு வீசா மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையிலேயே அவர் கிரீன் கார்ட் மூலம் அமெரிக்கா செல்வதற்கு தீர்மானித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular