Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டு75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை வழிநடத்த அமைச்சரவை உப குழு

75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை வழிநடத்த அமைச்சரவை உப குழு

- தமிழிலும் தேசிய கீதம் பாடப்படும்

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ள 75ஆவது சுதந்திரதின விழா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றும் வழிநடாத்துவதற்காக, உபகுழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த குழுவின் உறுப்பினர்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

பிரதமர், தினேஷ் குணவர்ன

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

அமைச்சர் (கலாநிதி) பந்துல குணவர்தன

அமைச்சர் அலி சப்ரி

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

அமைச்சர் கஞ்சன விஜேசேகர

அமைச்சர் டிரான் அலஸ்

இதேவேளை, இன்று (16) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், சுநத்திர தின தேசிய நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் பாடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, இதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. இதற்கு முன்னரும் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பாடப்பட்டுள்ளது.

சிங்களம் மற்றும் தமிழ் ஆகியன அரச கரும மொழிகளாக உள்ளன.
நாம் சிங்கள மொழியில் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டு அதன் நிறைவில் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular