Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeவெளிநாட்டுசிரியாவை தனிமைப்படுத்தும் வான் தாக்குதலை நடாத்தி இஸ்ரேல் எச்சரிக்கை

சிரியாவை தனிமைப்படுத்தும் வான் தாக்குதலை நடாத்தி இஸ்ரேல் எச்சரிக்கை

சிரியாவுக்கு இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகள் வரும் வழிகளை குறிவைத்து, இஸ்ரேலிய விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை (15) தாக்குதல் நடாத்தியுள்ளன. இதில்,03 சிரிய வீரர்கள் உயிழந்து,மூவர் காயமடைந்தனர். மத்தியதரைக்கடலிலிருந்தும், லெபனான் தலைநகர் பெய்ரூத்தின் தென் பகுதியிலிருந்தும் இத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

ஈரானின் ஆயுத உதவிகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் மனிதாபிமான உதவிகள் வரும் வழிகளே தாக்கப்பட்டன. பதிலடியாக பல எறிகணைகளை வானிலேயே சுட்டழித்ததால் பாரிய இழப்புக்கள் தவிர்க்கப்பட்டதாக சிரியாவின் இராணுவ தலைமையகம் தெரிவித்தது. 11 வருட யுத்தத்தில் அடிக்கடி இவ்வாறு சிரியா தாக்கப்படுகிறது.

சிரியாவில் 2011இல் வெடித்த உள்நா ட்டு யுத்தத்தில் ஐந்து இலட்சம்பேர் உயிரிழந்து பல இலட்சம்பேர் புகலிடம் தேடியலைகின்றனர். ஐரோப்பிய நாடுகளை நோக்கி மிக ஆபத்தான கடற்பயணங்களிலும் இம்மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அகதிகள் பிரச்சினை அதிகரித்து மிகப்பெரிய மானிடப்பேரிடரை ஏற்படுத்தியுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular