Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇந்த வார இறுதியுடன் அவசரகாலச் சட்டம் காலாவதி: நீடிக்கப்படும் சாத்தியமில்லை

இந்த வார இறுதியுடன் அவசரகாலச் சட்டம் காலாவதி: நீடிக்கப்படும் சாத்தியமில்லை

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் நீடிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியுடன் அவசரகாலச் சட்டம் காலாவதியாகும் நிலையில் அதனை நீடிக்க வேண்டுமானால் பாராளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

இந்நிலையில் நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதால்,இந்த வார இறுதிக்குள் காலாவதியாகவிருக்கும் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கூறினார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்பான ஸ்திரமன்ற நிலைமை மற்றும் போராட்டங்கள் வலுப் பெற்ற நிலையில் ஜீலை 14ஆம் திகதி அவசர கால நிலையை அப்போது பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். 

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular