Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமரணித்த அமரகீர்த்தி அத்துகோரளவின் மோதிரங்களை திருடிய சந்தேகநபர்கள் கைது

மரணித்த அமரகீர்த்தி அத்துகோரளவின் மோதிரங்களை திருடிய சந்தேகநபர்கள் கைது

– அடகு நிலையத்தில் அடகு வைத்துள்ளமை தெரியவந்துள்ளது

– பிரதேச சபை தலைவரின் கையடக்கத் தொலைபேசியும் மீட்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மரணிக்கும் போது அணிந்திருந்த தங்க மோதிரங்கள் மற்றும் மீகஹிகிவுல பிரதேச சபைத் தலைவரின் கையடக்கத் தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கைதான குறித்த இருவரும் அத்தனகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 09ஆம் திகதி நிட்டம்புவ நகரில் இடம்பெற்ற அமைதியின்மையின்போது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த பொலன்னறுவை மாவட்ட பொதுஜன பெரமுன கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜெண்ட் குணவர்தன ஆகியோர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மனிதப் படுகொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மீது தாக்குதல் மேற்கொண்ட வேளையில் அவர் தனது விரல்களில் அணிந்திருந்த தங்க மோதிரங்கள் இரண்டை கழற்றி எடுத்தமை மற்றும் மீகஹிகிவுல பிரதேச சபை தலைவரின் கையடக்க தொலைபேசியை களவாடியமை தொடர்பில் நேற்று முன்தினம் (08) பிற்பகல் நிட்டம்புவ, ரன்பொக்குணுகம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரிடம் இருந்து கையடக்க தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மீது தாக்குதல் மேற்கொண்ட வேளையில் அவர் விரலில் அணிந்திருந்த மற்றுமொரு மோதிரத்தை கழற்றியெடுத்தமை தொடர்பில் நேற்றைய தினம் (09) மற்றைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 30 ஆகிய நிட்டம்புவ மற்றும் ரன் பொக்குனுகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களால் கழற்றி எடுக்கப்பட்ட மோதிரங்கள் மூன்றும் நடை அடகு நிலையத்தில் அடகு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 37 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மனிதப் படுகொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments