Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுசபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது ஏன்? ஹர்ஷ டீ சில்வா

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது ஏன்? ஹர்ஷ டீ சில்வா

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து ஜனாதிபதி கதிரையில் அமர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.ஆனால்,சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து ஒலிவாங்கிகளை சேதப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து ஒலிவாங்கிகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக அப்போதைய சபாநாயகரால் குழுவொன்று நியமிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த அவர், அந்த குழுவின் அறிக்கையை வெளியிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தனவிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் தவறாக நடந்துகொள்ளும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை இல்லை. சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து தண்ணீரை கொட்டி மைக்கை சேதப்படுத்திய எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் சாதாரண பொதுமக்கள் மாத்திரம் தண்டிக்கப்படுகின்றனர். இப்படியே போனால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் ஹர்ஷ டி சில்வா எம்.பி. குறிப்பிட்டார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular