இலங்கையின் மக்கள் நம்பிக்கைக்குரிய தலைவர் அனுர குமார திசாநாயக்க: கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்

0
212

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் கருத்து கணிப்பு

– அனுரகுமார திசாநாயக்கவுக்கு 48.5 வீத வாக்கு

– மஹிந்த ராஜபக்சவுக்கு 11.9 % வாக்கு

– சஜித் பிரேமதாசவுக்கு 29.1% வாக்கு

– டலஸ் அழகபெரும 23.7% வீத வாக்குகள்

– தினேஷ் குணவார்டேனவுக்கு 18.3% வாக்கு

– ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 36.6% வாக்கு

இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு ஓரளவு தீர்வு காணக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவர்கள் யார்?

இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ஜேவிபி தலைவர் அனுரகுமாரு திசாநாயக்க 48.5 வீதம் வாக்குகளைப் பெற்று முன்னணியில் திகழ்கிறார்.
இதன்படி, இன்றைய நெருக்கடிக்கு தீர்வு காணக்கூடிய நம்பிக்கை உள்ள தலைவராக மக்கள் மத்தியிலே இடம்பிடித்திருக்கும் தலைவர் அனுரகுமார திசாநாயக்க என்பது தெளிவாகி இருக்கிறது.

இலங்கையில் உள்ள மாற்று கொள்கைக்கான நிலையம் மக்கள் மத்தியிலே கருத்துக்கணிப்பை நடத்தி, அதன் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவை இன்று வெளியிட்டு இருக்கிறது.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 36. 6 வீதம் வாக்குகளை பெற்றிருக்கிறார். இதே போல, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 29.1 வீதம்
வாக்குகளை பெற்றிருக்கிறார். டலஸ் அழக பெரும 23.7 வீதம் வாக்குகள். மஹிந்த ராஜபக்சவுக்கு 11.9 % வாக்குகள். தினேஷ் குணவார்டேனவுக்கு 18.3 6% வாக்ககுகள் பெற்றிருக்கிறார்.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டு ஜனநாயக வழிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக போராட்டக்காரர்கள் மீது மக்கள் பெரு நம்பிக்கை வைத்துள்ளதோடு 84.3 வீதம் வாக்குகளை வழங்கி இருக்கிறார்கள்.

இடைக்கால அரசு ஒன்று கட்டாயம் அவசியம் என்ற நம்பிக்கையில் 83.4% மக்கள் உடன்பாடு கண்டிருக்கிறார்கள்.

போராட்டம் நடத்தி ஜனநாயக ரீதியாக வெற்றிகொண்ட போராட்டக்காரர்கள், வன்முறைக்கு திரும்புவதை 82 வீதமான மக்கள் எதிர்க்கிறார்கள்.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் இதனை உத்தியபூர்வமாக இன்று வெளியிட்டு இருக்கிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்