ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி முஹமத் பின் சயிட் அல் நஹயன், நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடியாக உரையாடியுள்ளார்.
நேரடியாக தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திய ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி, தனது வாழ்த்துக்களை ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவித்துக் கொண்டார்.
இரு நாட்டுத் தலைவர்களும் இரு தரப்பு உறவுகள், மற்றும் இன்றைய நெருக்கடி நிலை தொடர்பாக கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக தெரிய வருகிறது.
இருவரும் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடியதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.