வடமாகாண ஆளுநராக விஜயகலா மகேஸ்வரன்…?

0
88

யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வட மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை வழங்குவதற்கு தீர்மானித்து உள்ளார் என அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் உள்ள எட்டாவது ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முக்கிய அரசாங்க உயர் பதவிகளில் மாற்றம் செய்யத் தீர்மானித்துள்ளதையடுத்து ஆளுநர் பதவிகளிலும் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்