அய்மன் அல்ஷவாஹிரி காபுலில் கொல்லப்பட்டார்.அமெரிக்க உளவு விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31)வீட்டிலிருக்கையிலே, இவரைக் குறிவைத்தது.எனினும், குடும்பத்த வர் எவரும் இதில் பலியாகவில்லை என,அமெரிக்கா அறிவித்துள்ளது. தெய்வநீதி வென்றதாக ஜோ பைடன் அறிவித்தார்,ஒஸாமாபின் லேடன் 2011இல், கொல்லப்பட்டதிலிருந்து, அல்கைதாவின் தலைவராக அய்மன்அல்ஷவாஹிரி செயற்பட்டார்.
வான் எல்லைக்குள் நுழைந்து தாக்கு தல் நடாத்தியதை தலிபான்களின் அரசு கண்டித்துள்ளது.எனினும், ஒப்ப ந்தத்தை மீறி நடந்துகொண்டதாக அமெரிக்கா பதிலளித்துள்ளது. கட்டாரில், தலிபான்களும் அமெரிக்க அதிகாரிகளும் 2020 இல்,ஒப்பந்தம் கைச்சாத்தி ட்டனர்.
பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஆப்கானிஸ்தானில் இடமளிப்பதில் லையென இதன்போது இணங்கப்பட் டது.இதையடுத்தே, அமெரிக்கப்படை கள் ஆப்கானிஸ்தானிலிருந்து 2020 ஆகஸ்டில் வெளியேறின.உளவு விமானம் எங்கிருந்து நுழைந்தது என்பதில் இதுவரை சந்தேகமே நிலவுகிறது.