Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுYouTube பிரபலம் 'ரெட்டா' மீண்டும் கைது

YouTube பிரபலம் ‘ரெட்டா’ மீண்டும் கைது

‘ரெட்டா’ என அழைக்கப்படும் YouTube பிரபலம் ரத்திந்து சேனாரத்ன கொம்பனித் தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர் பெதும் கேர்னர் தொடர்பில் தாமாகவே வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (01) பிற்பல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு (CCD) வந்த போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய விசேட பிரிவின் அதிகாரி ஒருவர் CCDஇற்கு வந்து ரத்திந்து சேனாரத்னவை கைது செய்ததாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.

கடந்த மே 21ஆம் திகதி, கொழும்பிலுள்ள இலங்கை வங்கி வீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை சம்பந்தமாக, கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக, அவரது சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதேவேளை, பொலிஸ் தலைமையகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கடந்த ஜூன் 22ஆம் திகதி ரத்திந்து சேனாரத்ன (ரெட்டா) உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜூலை 01ஆம் திகதி கோட்டை நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments