கொழும்பு, காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் சிலர், நட்சத்திர ஹோட்டல் அரையொன்றை பலா த்காரமாக பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டக்காரர்களில் மூவர், நட்சத்திர ஹோட்டலின் சொகுசு அறையை பலாத்காரமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்பது ஊர்ஜிதம் ஆகி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், சிசிடிவி காணொளிகளின் உதவியுடன் விசாரணைகளை துரிதப்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட ஹோட்டலின் முகாமையாளர் உட்பட பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.