Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபிறப்புச் சான்றிதழில் ஆளடையாள அட்டை இலக்கம்

பிறப்புச் சான்றிதழில் ஆளடையாள அட்டை இலக்கம்

- முன்னோடித் திட்டம் நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் ஆரம்பம்

இலங்கையில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்குவதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

முன்னோடி திட்டமாக மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டம் இன்று (01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா, தெஹிவளை, ஹங்குரன்கெத்த, குருணாகல், இரத்தினபுரி, தம்மன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பிறப்புச் சான்றிதழை பெற்ற சகல பிரஜைகளும் 15 வயதை எட்டிய பின்னர் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக, ஆட்பதிவுத் திணைக்களத்தில் விண்ணப்பிக்கும்போது, குறித்த இலக்கத்தை உள்ளீடு செய்து தேசிய ஆளடையாள அட்டை வழங்கப்படுமென, ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments