நடிகை ரோஜா கின்னஸ் சாதனை (படம் இணைப்பு)

124

நடிகையும் அமைச்சருமான ரோஜா ஒரே நேரத்தில் 3,000 பேருடன் புகைப்படம் எடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இந்திய ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் ரோஜா, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்தில் குவிந்துள்ளனர். இதையடுத்து அமைச்சர் ரோஜா திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறியுள்ளனர். அவரை சுற்றிலும் 3 ஆயிரம் நிற்க வைக்கப்பட்டனர்.

ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என்ற அர்த்தத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் புகைப்படக்கலைஞர்கள், அமைச்சர் ரோஜாவை புகைப்படம் எடுத்துள்ளனர். உலகத்தில் இதுவரை யாரும் பெண் அமைச்சர் ஒருவரை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் புகைப்படக்கலைஞர்கள் போட்டோ எடுக்கவில்லை.

இதையடுத்து ‘வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்’ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதையடுத்து அமைச்சர் ரோஜாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group