Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeமருத்துவம்திருகோணமலையில் கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை

திருகோணமலையில் கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை

திருகோணமலையில் கொரோனா தொற்றாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலை- அபயபுர பகுதியில் 25 வயது உடைய தாயாருக்கும் ஒரு மாத கைக்குழந்தைக்கும் தொடர்ச்சியான காய்ச்சல் ஏற்பட்ட போது தனியார் மருத்துவமனையில் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நகர்பகுதியில் உள்ள 50 வயதுடைய நபர் ஒருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் குறித்த நபரிடம் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டு வருமாறு வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த நபர் தனியார் மருத்துவமனையில் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றி வந்த பொது சுகாதார பரிசோதருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் மற்றும் பி சி ஆர் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகவே திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் சமூக இடைவெளிகளை பேணுமாறும், தொடர்ச்சியாக முகக் கவசங்களை அணியுமாறும் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூட வேண்டாமேவும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்குமாறும் திருவண்ணாமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் விடயத்திற்கு பொறுப்பான வைத்திய பொறுப்பதிகாரி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments