புதுடெல்லி: மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் நேற்று முன்தினம் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: மற்ற நாடுகளின் ராணுவ செலவு விவரங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சேகரிக்கவில்லை. எனினும் ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (எஸ்ஐபிஆர்ஐ) இணையதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2021-ம் ஆண்டில் உலக நாடுகளின் ராணுவ செலவினங்கள் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
இதன்படி அமெரிக்காவின் ராணுவ செலவு ரூ.63.4 லட்சம் கோடியாகவும் சீனாவின் ராணுவ செலவு ரூ.23.23 லட்சம் கோடியாகவும் உள்ளது. இதற்கு அடுத்து இந்தியாவின் ராணுவ செலவு ரூ.6.06 லட்சம் கோடியாக உள்ளது. சர்வதேச அளவில் ராணுவத்துக்கு செலவு செய்வதில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.