Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeவெளிநாட்டுஈராக்கில் பிரதமர் பதவியை தெரிவதில் ஷியா சமூகத்துக்குள் பிளவு

ஈராக்கில் பிரதமர் பதவியை தெரிவதில் ஷியா சமூகத்துக்குள் பிளவு

ஈரான்,அமெரிக்கா என்பவற்றின் செல்வாக்கில் இல்லாத ஈராக் வேண்டுமென ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.முன்னணி ஷியா கட்சியின் ஆதரவாளர்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈராக் பாராளுமன்றம், நீதிமன்றம், இராணு தலைமையகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அமைந்துள்ள பச்சை வலயப்பகுதி இவர்களது கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

கடந்த புதன்கிழமை (27) ஆரம்பமான இந்த ஆர்ப்பாட் டம் சனிக்கிழமை வரைத் தொடர்ந்தது. இதனால்,புதிய பிரதமரைத் தெரிவதற்கு பாராளுமன் றத்தில் நடத்தப்படவிருந்த (30) வாக் கெடுப்பு நிறுத்தப்பட்டு பாராளுமன் றமும் ஒத்திவைக்கப்பட்டது.ஈராக்கின் முன்னாள் பிரதமர் நூரிஅல்மாலிகியி ன் சகாவான ஷியாஅல்சுதானி இந்த வாக்களிப்பில் வெற்றியீட்டவிருந்தார்

இவர், போட்டியிடுவதை எதிர்த்தே அங்கு ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள் ளன. முன்னணி ஷியா கட்சி தலைவரான முக்ததாஅல்சத்ரின் ஆதரவாளர்களே இந்த ஆர்ப்பாட்ட த்தை முன்னெடுக்கின்றனர்.ஈராக்கி ல் பெரும்பான்மையாகவுள்ள ஷியா முஸ்லிம்களுக்கே,பிரதமர் பதவி வழங்கப்படும் மரபு அங்கு பின்பற்றப் படுகிறது. இந்நிலையில்,இந்த ஆர்ப்பாட்டம் ஷியா சமூகத்துக்குள் பிளவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments