பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இலங்கையில் பெண்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றம் இவர்களுள் பலர் தமது வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழில்களை நாடுவதாகவும் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ANI செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக பெண்கள் பாலியல் தொழில்களை நாடும் நிலை அகரித்துள்ளதாகவும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் Standup Movement lanka என்ற அமைப்பு குறித்த செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் இலங்கையில் பாலியல் தொழிற்றுரை 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் தொழில்வாய்ப்பை இழக்கும் பெண்கள் மசாஜ் நிலையங்களுக்கு தொழிலுக்கு செல்வதுடன் பாலியல் ரீதியான தொழில்களில் ஈடுபடுவதாகவும் குறித்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.
பட்டினியால் வாடும் ஒரு இலட்சம் குடும்பங்கள்
இலங்கையில் ஒரு இலட்சம் குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
75,000 குடும்பங்கள் தினசரி என்ன சாப்பிடுவது என்று தெரியாமல், உணவு நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகவும், 40,000 பேர் ‘சேலைன் ‘ மூலம் போஷாக்கை பெறுவதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் தற்போது நிலவும் நெருக்கடிக்கு உரிய தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால் இந்த நிலைமை மிகவும் மோசமானதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.