சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்வதற்காக வடமராட்சி கிழக்கு – மணற்காடு பகுதியில் உள்ள வீடுகளில் தங்கியிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்லும் நோக்கில் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மணற்காடு பகுதியில் உள்ள வீடுகளில் தங்கியிருந்த 13 பேர் பருத்தித்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற பருத்தித்துறை பொலிசாரினால் நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வட மாகாணத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் மூலம் தெரியவருவதாக மேலும் தெரிவித்தார்.