சிறிலங்காவின் தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் ஒரு வருட காலத்திற்கு உறுப்பினர்களுக்குரிய சம்பள அடிப்படையில், பணியாற்றுவார்கள் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி ஆட்சி அமைத்த பின்னர் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு, அமைச்சர்களுக்குரிய சம்பளத்தை வழங்காமல் நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய சம்பளத்தை மாத்திரம் வழங்க சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.