Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுரத்மலானையில் வீட்டினுள் புகுந்து துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு: இரவில் துணிகரம்

ரத்மலானையில் வீட்டினுள் புகுந்து துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு: இரவில் துணிகரம்

இரத்மலானை, சில்வா மாவத்தை பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்குள் நுழைந்த இருவர் வீட்டில் இருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்மலானை சில்வா மாவத்தையில் வசிக்கும் 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைக்கு டி-56 ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments